தமிழகத்தில் இன்று கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக ஊராட்சி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.