சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள பில்லமங்களம் கண்மாயில் காவல்துறை அனுமதியின்றி மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதில் கீழச்சிவல்பட்டி, விராமதி, இரணியூர், இளையத்தங்குடி, ஆத்தங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கட்லா, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனர்.