தமிழகத்தில் மே 1-ஆம் தேதி சனிக்கிழமையன்று முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மே 1, 2 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில், தொழிலாளர் தினத்துக்கு பொது விடுமுறை என்பதால் மே 1-ம் தேதி சனிக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டியதில்லை, அன்றைய தினம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
அதேசமயம், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதின் படி வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதியும் முழு ஊரடங்கு அமலில் இருக்குமெனவும் அரசு தெரிவித்துள்ளது. விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வாக்கு எண்ணும் மையங்களில் ஊடகங்களை அனுமதிப்பது குறித்து நாளை பதிலளிக்க உத்தரவிட்டனர்.