வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வெவ்வேறு பகுதிகளில் நிலவும் இரு வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பீட்டு ஈரப்பதம் 90சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.