செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மலைக்க வைக்கும் அரியவகை மரங்கள்..! பசுமை தோட்டத்துக்குள் ஓர் பயணம்

Apr 29, 2021 10:24:43 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில் அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார் விவசாயி ஒருவர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள ஆதிவராக நல்லூரைச் சேர்ந்த பரமானந்தம் என்ற அந்த முதியவரின் வீடு அடர்ந்த வனம்போல் காட்சியளிக்கும் அவரது பூர்வீக தோட்டத்துக்கு நடுவே அமைந்துள்ளது.

தேக்குமரம், செம்மரம், வேங்கை, லவங்க மரம், மோகினி ,ஈட்டி, ருத்ராட்சம் , தேன்அத்தி, பிஸ்தா மரம், பாதாம் மரம், கருங்காலி, திருவோடு, தான்றிக்காய், கடுக்காய் ,நெல்லி மரம், மகிழமரம், நாகலிங்கம், வன்னிமரம், அத்தி, பலா, முந்திரி என சுமார் 500 வகையான மரங்களையும் சின்னி, செருகுறுங்சி, பெரியாநங்கை, சொரியாசிஸ், நத்தப்பாலை, ஆடுதிண்ணப்பாலை, முள்சித்தரத்தை, கருநொச்சி, உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட அழிந்து வரும் அரிய மூலிகைச் செடிகளையும் வளர்த்து வருகிறார் பரமானந்தம். கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தேடித் தேடி விதைகளைச் சேகரித்து கொண்டு வந்து தனது தோட்டத்தில் பயிர் செய்து, கண்ணும் கருத்துமாய் அவற்றைப் பராமரித்து வருகிறார்.

தனது நிலத்தைச் சுற்றி இருக்கும் நிலங்களில் எல்லாம் மணிலா, முருங்கை என பணப் பயிர் சாகுபடி செய்து வரும் நிலையில், தனக்கு அவற்றில் விருப்பம் இல்லை என்கிறார். எந்த மரம் எந்த தட்ப வெப்ப நிலையில், எந்த மாதிரியான மண்ணில் விளையும், எந்த மூலிகை எந்த மாதிரியான பிரச்சனைகளைத் தீர்க்கும் என சரளமாகக் கூறுகிறார்.

செயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் முழுக்க, முழுக்க இயற்கை இடுபொருட்களைக் கொண்டு மட்டுமே மரங்களையும் மூலிகைகளையும் வளர்த்து வரும் பரமானந்தம், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மாணவ, மாணவிகளுக்கு மரங்களைப் பற்றி விளக்குகிறார்.

ஆயிரக்கணக்கான மரங்களைக் கொண்ட ஒரு ஆக்சிஜன் ஆலையையே நிர்வகித்து வரும் பரமானந்தம், வாய்ப்பு இருப்பவர்கள் அனைவரையும் மரம் வளர்ப்பில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.


Advertisement
ரூ.36 லட்சத்தில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள பொதுக் கழிவறை
விளாத்திக்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த அரசுப் பேருந்து
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..
போலி பத்திரம் வைத்து நில மோசடியில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை கைது செய்த போலீசார்..
புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பிறந்தநாளையொட்டி வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள்..
கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த சம்பவம் - 2 பேர் கைது
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement