தமிழகத்தில் சிமென்ட் விலையேற்றம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்தக்காரர்கள் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவில், சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சிமென்ட் உற்பத்தியாளர்கள் கூட்டுச் சேர்ந்து செயற்கையாகத் தட்டுப்பாட்டை உண்டாக்கி விலையை உயர்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிமென்ட் விலையேற்றம் குறித்து விசாரித்து ஜூன் மூன்றாம் நாள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.