தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும், வேட்பாளர்களின் முகவர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம், திண்டிவனம் தொகுதிகளுக்கு நடைபெற்ற முகாம்களில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் பரிசோதனை செய்துகொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளின் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா சோதனை செய்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் என இருநூற்றுக்கு மேற்பட்டோர் சோதனை செய்துகொண்டனர்.
அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறையினருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. தகுதி உள்ளோருக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. தனியார் மண்டபத்தில் முகவர்களுக்கு சோதனை மாதிரி எடுக்கப்பட்டது.