பேராசிரியர்களை கல்லூரிக்கு வரும்படி நிர்பந்திக்கக்கூடாது என அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வரத் தேவையில்லை, வீடுகளில் இருந்தே பாடம் நடத்தலாம் என்றும் கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு முரணாக, பேராசிரியர்களை கல்லூரிகளுக்கு வரவழைப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு பேராசிரியர்களை நிர்பந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.