உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி ஒருவர் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலுள்ள நீதிபதிகள், பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், நீதிபதி ஒருவர் உட்பட 13 கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் குடியிருப்பு மற்றும் நீதிமன்றத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.