திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ஜூன் அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பதற்கு தேர்தல் ஆணையம் ஆலோசிக்கவே இல்லை என்றார்.
மே 1 மற்றும் 2ம் தேதி ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். தினசரி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும்,சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதனிடையே கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.