மாநில அரசுகளுக்கு விற்கப்படும் கொரோனா தடுப்பூசியின் விலை நியாயமற்ற விதத்தில் இருப்பதால், மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருக்கிறார்.
மூன்றாவது கட்டமாக 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், மத்திய அரசுக்கு வழங்கும் விலையை காட்டிலும், மாநில அரசுகளுக்கு அதிக விலையை தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயித்து இருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது, மாநில அரசுகளுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்கும் என்பதால், மத்திய அரசே அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்குவதுடன், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.