கனடாவின் டொரொன்டோ பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்கத் திமுக சார்பில் பத்து லட்ச ரூபாய் நிதி வழங்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கனடாவின் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க கனடா வாழ் தமிழர்களும், உலகத் தமிழர்களும் முயன்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக சார்பில் நிதியுதவி வழங்க வேண்டுமெனக் கனடியத் தமிழர் பேரவை நிறைவேற்று இயக்குநர் டன்ரன் துரைராஜா கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, திமுக சார்பில் டொரொன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.