தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்றுவரை 5 லட்சத்து 63 ஆயிரத்து 658 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதனை மீறுவோர் மீது வழக்குப்பதியப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று மட்டும் தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த 24 ஆயிரத்து 995 பேர் மீதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத 628 பேர் மீதும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது தொடர்பாக 17ஆயிரத்து 398 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.