கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவை கருதி, தமிழகம் முழுவதுமுள்ள 2000 மினி கிளினிக்குகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் 2ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவின் 2-ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளதால் மினி கிளினிக்குகளில் பணிபுரிந்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் இனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பணிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
மினி கிளினிக்குகள் உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்தது போல, துணை சுகாதார நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.