வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், மகராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வருகிற 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் நகரில் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 90 விழுக்காடு வரை இருப்பதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.