கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கபசுர குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், சென்னை எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 3 தொகுதி மக்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பொருட்கள் வாங்க வந்த அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து வரிசையில் தனிநபர் இடைவெளியுடன் காத்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.