தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 9-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, கணித ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் கோவிந்தன், அப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை புத்தகம் வாங்க வருமாறு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவி பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பெற்றோர் இண்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கோவிந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.