மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் குடலிறக்கப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவ்வாயன்று வீடு திரும்பினார். மூன்று நாள் ஓய்வில் இருக்கும்படி முதலமைச்சரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தேனியில் இருந்து நேற்றுச் சென்னைக்குத் திரும்பிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்று அவரின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.