கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏ.எஸ்.மற்றும் ஐபிஎஸ் ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் இக்கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.