தடுப்பூசி விரயமாவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை வீணடித்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடம் பெற்றுள்ளதாகவும், அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசியை அலட்சியமாக கையாள்வது கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா 2- வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா பரவலை தடுப்பதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்திருப்பது ஏன்? எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காக்கத் தேவையானவை தட்டுப்பாடு இன்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.