திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் உறவினர்களே பிரசவம் பார்த்ததால் தாயும் சேயும் உயிரிழந்தனர்.
எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதில் கோபு என்பவரது மனைவி பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் செங்கல் சூளையிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்ததில் பூஜா உயிரிழந்தார். மேலும் பெண் சிசுவும் உயிரிழந்த நிலையில் பிறந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் இருவரது உடல்களையும் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.