வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 7 பேர் உயிரிழந்ததிற்கு ஆக்ஸிஜன் தேவைக்கும் காரணம் இல்லை என மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சிலிண்டர்கள் உள்ளதாகவும், 1500 லிட்டர் ஆக்ஸிஜன் மட்டுமே தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
உயிரிழந்த 4 பேரில் 3 பேர் ஏற்கனவே கொரோனா பாதித்து மறுபடியும் பரிசோதனை செய்யும் போது நெகட்டிவ் என முடிவு வந்ததாகவும், இறப்புக்கு ஆக்ஸிஜன் தேவைக்கும் சம்மந்தமில்லை என்றார்.