மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மையங்களில், கண்டெய்னர் உள்ளிட்ட மர்ம வாகனங்கள் மற்றும் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், வாக்கு எந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே மர்மமான முறையில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுவது, லேப்டாப்புடன் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளிட்ட சம்பவங்கள் விதி மீறல் மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கு ஆபத்தானவை என்றார்.
மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ள இவிஎம் ஸ்ட்ராங் ரூம் உண்மையில் ஸ்ட்ராங் ரூமாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் வலியுறுத்தினார்.