மயிலாடுதுறையில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்து உள்ளனர்.
செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வரும் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரித்த நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் அளித்த புகாரை அடுத்து போலீசார் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.