டாஸ்மாக் கடைகளில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதத்தில் டோக்கன் முறையில் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதை டோக்கனில் குறிப்பிட வேண்டும் என்றும், மாலை 4 மணிக்குப் பிறகு டோக்கனை வழங்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாலை 5 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடை பணியாளர்கள் மூன்றடுக்கு முக கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.