பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்ட விவரத்தை மாணவர்களுக்குத் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் செய்முறைத் தேர்வுகளை கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தவும், அந்த மதிப்பெண்களை 24 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.