செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் பூஜ்யமாகக்கூடிய நிழல் இல்லா நாள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று நிகழ்ந்தது.
நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும்போது, நிழலானது எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியிலேயே இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருள்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்துவிடுவதால் நம் கண்களுக்குத் தெரியாது.
ராசிபுரத்தில் தமிழ்நாடு அறிவியல் கிளை இயக்கம் சார்பில் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பொருட்களை வைத்து நிழல் இல்லா நாளை ஆசிரியர்கள் விளக்கினர்.