முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.