அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது மாதிரி இப்போதெல்லாம் கண்டெய்னரை கண்டாலே தி.மு.கவினர் ஆவேசமடைந்த விடுகின்றனர்.
ஆலங்குளத்தில் தனியார் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட கண்டெய்னரை அப்புறப்படுத்த தி.மு.கவினர் கோரிக்கை விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்துக்குட்பட்ட உட்பட்ட சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி அருகே தனியார் நிலத்தில் கட்டிடம் கட்டும் பணிக்காக கண்டைய்னர் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த கண்டெய்னரை கண்டதும் ஏராளமான திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அங்கு திரண்டனர்.
உடனடியாக, அங்கு வைக்கப்பட்ட கண்டெய்னரைத அங்கிருந்து அப்புறப்படுத்த கோரி முற்றுகையிலும் ஈடுபட்டனர்.
வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள USP பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான பட்டா இடத்தில் இந்த கண்டெய்னர் இருந்தது.
கட்டட வேலைக்கு பயன்படுத்துவதற்காக கண்டெய்னரை கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிறகு, போலீஸார் முன்னிலையில் கண்டெய்னர் பெட்டி திறந்து காட்டப்பட்டது.
உள்ளே பொருள்கள் எதுவுமில்லை. எனினும், அந்த கண்டெய்னர் அங்கு இருக்க கூடாது என்று அரசியல் கட்சியினர் அடம் பிடித்தனர்.
தொடர்ந்து, அந்த கண்டெய்னர் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த பட்டுள்ளது. அந்த பகுதிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.