வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
நாளையும் நீலகிரி, கோவை, சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு நகரில் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 11 செ.மீ.மழையும், கொடுமுடியில் 10 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.