விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டில் ஆடுமேய்க்கச் சென்ற தந்தை மகன் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியும் அவரது மகன் ராஜேஷும் நேற்று அருணாச்சலபுரம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர். அப்போது பலத்த இடி மின்னலுடன் மழை பெய்ததால் மழையில் நினையாமல் இருப்பதற்காக இருவரும் அங்கிருந்த பெரியண்ணசாமி கோயில் மரத்தடியில் ஒதுங்கியுள்ளனர்.
அப்போது பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. இருவரது உடல்களையும் மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.