செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்.... மீன்களின் விலை உயர வாய்ப்பு!

Apr 15, 2021 07:05:25 PM

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக தமிழகத்தில் 61 நாட்கள் அடங்கிய மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், மீன்களின் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரையிலுள்ள தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும். கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வருகிற ஜூன் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

இந்த கால கட்டத்தில் எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம், எஞ்சின் பொருத்தப்படாத பாரம்பரிய நாட்டு படகுகள் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்க தடை இல்லை. இந்த காலத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தமிழக அரசு சார்பில் தலா 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதால், மீன்களின் விலை வரும் நாட்களில் கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது.

 சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை சுத்தம் செய்து பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த பல மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை என்றும் படகுகளை பராமரிக்க, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர், செருதூர் உள்ளிட்ட 64 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் விசைப்படகுகளை கரையேற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த 61 நாட்களுக்கு படகுகளை பழுதுபார்த்தல், வலைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 தூத்துக்குடியில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை பராமரித்தல், மீன் வலைகள் பின்னுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கும் மீனவர்கள், தடைக்கால நிவாரணத் தொகை தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
140 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது
மண்ணையும் தண்ணீரையும் கலந்து ஆட்டின் வயிற்றில் ஊற்றி விற்பனை... ஏமாந்தவர் வியாபாரியுடன் வாக்குவாதம்
பணியில் சேருபவர்களைவிட பணிகளை உருவாக்குபவர்களே தேவை-பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
நிதிக்கமிஷன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு வருகை
மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு அதிகாரிகள் அஞ்சலி
அமெரிக்காவில் கேரம் போட்டியில் தங்கம் வென்ற தமிழ் மாணவி மகளுக்குப் கேரம் பயிற்சி அளித்த ஆட்டோ ஓட்டுநர்
பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்
இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேர் கைது
பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர் மீது போதை கும்பல் தாக்குதல்
மருத்துவர் பணியிடங்களை நிரப்ப ஜனவரியில் தேர்வு - அமைச்சர் மா.,சு அறிவிப்பு

Advertisement
Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..

Posted Nov 17, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தைல டப்பாவை விழுங்கிய 7 மாத குழந்தை.. தொண்டையில் சிக்கிய டப்பா வாயில் கொட்டிய ரத்தம்..! துரிதமாக செயல்பட்ட அரசு மருத்துவர்கள்

Posted Nov 16, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!

Posted Nov 16, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Posted Nov 16, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரீசர் பாக்ஸில் மாமியார் திடீர் தீயில் கருகிய மருமகள் துக்க வீட்டில் துயர சம்பவம்..! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மேலாளர்


Advertisement