தமிழகத்தில் அதிமுக - பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என முன்னாள் மத்திய அமைச்சரும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க.வேட்பாளருமான பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு புறப்பட்ட பொன்.ராதாகிருஷ்ணனிடம், மூதாட்டி ஒருவர் வந்து மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார் என்றும், அதற்காக மீனாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டதாகவும் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன் திமுகவைச் சேர்ந்தவர் என நினைத்து மூதாட்டி பேசியதை அவர் பொருட்படுத்தாமல் காரில் ஏறிச் சென்றார்.