செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்..! கோயில்களில் சிறப்பு வழிபாடு

Apr 14, 2021 05:30:08 PM

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் முதலாவதாக வரும் சித்திரை மாதம் முதல் நாள் புது வருடப்பிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்குவது இந்த சித்திரை மாதத்தில் தான். புத்தாண்டில் பூஜை அறையை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து கனிகளை வைத்து காண்பதன் மூலம் வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

சார்வரி தமிழ்ப் புத்தாண்டு நிறைவடைந்து, இன்று பிலவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது. இதனை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற விசுக்கனி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்: புத்தாண்டை ஒட்டி, நாமக்கலிலுள்ள 18 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு தங்கக் கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு, மலர் அலங்காரத்துடன் காட்சியளித்த ஆஞ்சிநேயரை பக்தி பரவசத்துடன் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

தஞ்சாவூர்: பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். கொரோனா வழிக்காட்டுதல்படி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

காரைக்குடியிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், பக்தர்கள் இன்றி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது

நெல்லை, தாமிரபரணி கரையிலுள்ள உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சூரிய தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கோயிலில் பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கப்படி, சூரிய ஒளி ராஜ கோபுரம் வழியாக மூலஸ்தானத்தில் அமர்ந்துள்ள விநாயகர் மீது இந்த ஆண்டும் விழுந்தது.

கன்னியாகுமரியில் புத்தாண்டையொட்டி வீடுகள், கோயில்களில் கனிகாணும் நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்பட்டது. கைநீட்டம் எனப்படும் காசு வழங்கும் நிகழ்ச்சியிலும் பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கும்பகோணம் சுவாமிமலையில் நடைபெற்ற, படி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். கோவிலுள்ள 60 படிகளில் குத்து விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூரிலுள்ள பாண்டுரங்கன் சமேத ரகுமாயி தாயார் கோயிலில், பெருமாளுக்கு பத்தாயிரத்து எட்டு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்தனர். தெற்கு பிரகார வாயிலில் உப்பு, மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும், வேலில் எலுமிச்சை கனி குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரளான மக்கள் கொரோனா தடுப்பு முறைகளை கடைபிடித்து அம்மனை தரிசித்தனர்.

 திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் பிலவ ஆண்டு உதயமானதை ஒட்டி திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வரும் மக்கள் மட்டுமே உடல் வெப்ப நிலை பரிசோதனைக்கு பின் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.  

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விசுக்கனி தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் 2ம் அறுபடை வீடான இக்கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற கனி காணும் நிகழ்வில் நிலைக் கண்ணாடியின் முன் பலவகைப் பழங்கள் வைக்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். 

தமிழ் வருட பிறப்பை ஒட்டி, நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோயிலில் நடந்த கோ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்றான ராஜகோபாலசுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரம் முன்  பசுவுக்கு புதிய வஸ்திரங்கள் அணிவித்து வேத மந்திரங்களுடன் கோ பூஜை நடைபெற்றது. 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல்லில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு தங்கக் கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புத்தாண்டையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்ததுடன், உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு, மலர் அலங்காரத்துடன் காட்சியளித்த சுவாமிக்கு மகா தீபாரதனை  காட்டப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி  பக்தர்கள் நீண்ட வரசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சேலத்திலுள்ள ராஜகணபதி ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு 54 திரவியங்கள் கொண்டும் 108 பால் குடங்களாலும் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு விநாயகருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருப்பூரிலுள்ள முக்கியக் கோவில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது. திருப்பூர் - கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற விசுக்கனி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருப்பூர் - ஊத்துக்குளி சாலையிலுள்ள குருவாயூரப்பன் கோயிலிலும் சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் கனிகளுடன் கண்ணாடியில் முகம் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகளில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தவாறு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில் வழக்கமாக தமிழ் புத்தாண்டு அன்று மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை குறைந்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோவிலில், தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டையொட்டி நெல்லை, தாமிரபரணி கரையிலுள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சூரிய தரிசனம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில், மூலவருக்கு மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிருதம், போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. இதனையடுத்து, சூரிய ஒளி இராஜ கோபுரம் வழியாக மூலஸ்தானத்தில் அமர்ந்துள்ள விநாயகப்பெருமான் மீது விழுந்ததையடுத்து, தீபாரதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதி சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலுள்ள ஐயப்பன் கோவிலில் மூலவருக்கு பழங்கள், காய்கறிகள், 20 ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு கை நீட்டம் அடிப்படையில் பழங்கள், நாணயங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதேபோல், அதே பகுதியில் அமைந்துள்ள காமாட்சி பரமேஸ்வரி கோவிலில், அம்மன் கனி வகைகளால் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில், பழவகைகள், நாணயங்கள், நகைகள், முகம் பார்க்கும் கண்ணாடி பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

திருவண்ணாமலை: தமிழ் புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூரிலுள்ள பாண்டுரங்கன் சமேத ரகுமாயி தாயார் கோவிலில், பெருமாளுக்கு பத்தாயிரத்து எட்டு பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பிலவ வருடம் தமிழ் புத்தாண்டு அன்று பெருமாளுக்கு பழங்களால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் நடைபெற்ற, படி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி, கோவிலுள்ள 60 படிகளில் குத்து விளக்கேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த முருக பெருமானை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரியில் தமிழ் புத்தாண்டையொட்டி வீடுகளிலும் பல்வேறு கோவில்களிலும் கனிகாணும் நிகழ்ச்சி விமரிசையாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள ஆதிபராசக்தி கோவில், தாணுமாலய சுவாமி கோவில் ஆகிய பல்வேறு கோவில்களில் காய்கனிகளைப் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற கைநீட்டம் எனப்படும் காசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் காய்கனிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதேபோன்று வீடுகளிலும் திருவிளக்கின் முன் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து அதற்கு தங்கச் சங்கிலி அணிவித்தும் காய்கறிகளை வைத்தும் அதில் முகம் பார்த்து கனிகாணும் நிகழ்வு கொண்டாடப்பட்டது.

 


Advertisement
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்
அமைச்சர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
15 இரும்பு சத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் உண்ட பள்ளி மாணவன்
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
காரைக்குடி விமான நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த மதுரை உயர்நீதிமன்றம்
நெல்லை அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆதரவாளர்களிடையே கைகலப்பு
ஆற்றில் நீரெடுக்கும் தண்ணீர் தொட்டியில் உறங்கும் முதலை... முதலையைப் பிடித்து செல்ல வனத்துறையிடம் கோரிக்கை
மண்டல அளவிலான உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement