சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்ட தந்தை பெரியாரின் பெயர் மாற்றப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1979-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு தந்தை பெரியார் பெயரை சூட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நெடுஞ்சாலைத்துறை வைத்துள்ள பலகையில் Grand Western Trunk Road என எழுதப்பட்டிருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என மாற்றம் செய்திட வலியுறுத்தியுள்ளார்.
தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் எனவும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.