கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு முதலில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பின்னர், நுரையீரல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, தேவையான சிகிச்சை முறை குறித்து பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், பொதுமக்கள் சிலர் இதற்கு எதிர்மாறாக, அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்யாமலேயே தன்னிச்சையாக தனியார் ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுப்பதாகவும், அதில் ஏதேனும் முடிவுகள் தெரிய வந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.