தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் 14 முதல் 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தென்தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகக் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.