பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, அக்கட்சியின் திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளர் கலிவரதன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஒன்றியச் செயலாளர் பிரபுவை கடந்த 8-ம்தேதி செல்போனில் தொடர்பு கொண்ட கலிவரதன், வாக்குப்பதிவு நிலவரம் குறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், கலிவரதன் தனது ஆதரவாளர்கள் 10 பேருடன் பிரபு வீட்டுக்குச் சென்று அவரது மனைவியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்து பிரபு மனைவி செல்லம்மாள் கொடுத்த புகாரில், கலிவரதன் உட்பட 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.