நாகப்பட்டினத்தில் துக்க வீட்டில் வெடித்த வெடியில் இருந்து வெளியேறிய தீப்பொறி அருகிலிருந்த குடிசை வீட்டில் பட்டு, அடுத்தடுத்து 40 வீடுகள் பற்றி எரிந்து நாசமாகின.
காட்டுநாயக்கன் தெருவில் பெண் ஒருவர் இறந்துவிட்டார். இதற்கான துக்க நிகழ்வின்போது, இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது, பட்டாசு தீப்பொறி அருகிலிருந்த குடிசை வீடு ஒன்றின் மீது பட்டு எரியத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், தீ அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி சுமார் 20 வீடுகள் தீக்கிரையாகின.
தகவலறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.