நாகையில் தேர்தல் முன்விரோதத்தில் அதிமுக - திமுகவினர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
அண்மையில் ஆரியநாட்டுத் தெரு பகுதியில் வாக்கு சேகரிக்கும்போது திமுக மற்றும் அதிமுகவினரிடையே தகராறு ஏற்பட்டது. அதே கும்பல் புதன் கிழமை மீண்டும் மோதலில் ஈடுபட்டது. அதில் இளைஞர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களைப் பார்க்க வந்த 2 கும்பல்களுக்கிடையே மருத்துவமனை வளாகத்திலேயே மீண்டும் மோதல் உருவாகி, ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக் கொண்டனர்.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, மோதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.