தூத்துக்குடியில் 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளியின் 15 வயது மகளுடைய அறுவை சிகிச்சைக்கு சாலையோர கடைக்காரர்கள் முதல் சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து நிதியளித்து நெகிழவைத்துள்ளனர்.
அனுஷா என்ற அந்தச் சிறுமிக்கு அவருடைய தாயின் சிறுநீரகம் பொருத்தப்படவுள்ள நிலையில், சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சாலையோர கடைக்காரர்கள் முதல், வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களாலான நிதியைத் திரட்டி, முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாயை மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் வழங்கியுள்ளனர்.