தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விடுத்த நோட்டீசுக்கு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி பதிலளித்துள்ளார்.
மறைந்த சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி பற்றிப் பிரசாரத்தின்போது திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பேசியது குறித்து தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்குப் பதிலளித்து தேர்தல் ஆணைய செயலாளருக்கு உதயநிதி அனுப்பிய கடிதத்தில்,தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
மார்ச் 31ஆம் தேதி தாராபுரத்தில் தாம் பேசியதை முழுவதும் எடுத்துக்கொள்ளாமல், 2 வரிகளை மட்டுமே கூறிக் குற்றஞ்சாட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முழுப் பேச்சையும் வழங்கினால், அதற்கு சரியாக பதிலளிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.