திருப்பத்தூர் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் தந்தை-மகன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலாஜி என்பவர் தனது 8 வயது மகன் ஜெகதீஷிற்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவையும் மகனையும் ஒன்றாகக் கட்டி கிணற்றில் இறக்கியுள்ளார். இந்நிலையில் கயிறு திடிரென அவிழ்ந்து மகன் தத்தளிப்பதைக் கண்ட பாலாஜி, ஜெகதீஷை காப்பாற்ற கிணற்றுக்குள் வேகமாக குதித்ததில் சேற்றில் சிக்கினார்.
இதனையடுத்து இருவரும் கிணற்றிலேயே மூழ்கி உயிரிழந்தனர்.