கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் பார்வையிட்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த கல்லூரிக்கு வந்த கமல்ஹாசன், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.