அதிமுக கொடி கட்டிய காரில் வாக்களிக்க சென்றதால், தேர்தல் விதிகளை மீறியதாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேற்று காலை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த போது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது குறித்து தேர்தல் அதிகாரி ராஜா முகமது என்பவர் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் வேலுமணி தேர்தல் விதிகளை மீறியதாக,குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதே போன்று கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வருகையின்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.