விருதுநகர் மாவட்டம் மைலி கிராமத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலை புறக்கணித்தனர்.
திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மைலி கிராமத்திற்கும் கீழ இடையன்குளம் கிராமத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக தண்ணீர் வரத்துக் கால்வாய் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினை தீர்வுக்கு காணாததால் மைலி கிராம மக்கள் தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை ஏற்கனவே திருச்சுழி தாசில்தாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்த நிலையில், கால்வாய் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தும் விதமாக வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தலையும் மைலி கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். சுமார் 300 ஓட்டுக்கள் கொண்ட கிராமத்தில் வெறும் 18 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.