வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டி தேர்தலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, பாஸ்போர்ட், வங்கி அல்லது தபால் புத்தகம், மருத்துவ காப்பீடு அடையாள அட்டை கொண்டு வாக்களிக்கலாம்.
அல்லது ஊரக வேலைவாய்ப்பு அட்டை, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு அட்டை, ஓய்வூதிய அட்டை, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் வழங்கும் அட்டை, எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு வழங்கப்படும் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.