வாக்களிப்பதற்கு பூத் சிலிப் கட்டாயம் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைப்பெறுகிறது.
கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரம் பி.பி.இ கிட் அணிந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறினார்.
பணம் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்ட தொகுதிகளில் தேர்தலை நிறுத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு எடுக்கும் எனவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
80 வயதுக்கு மேற்டோரிடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ கூறினார்.