தேர்தல் நடத்தை விதிகளை மீறி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தால், சைபர் கிரைம் மூலம் காண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஸ்குமார் அகர்வால், விதிகளை மீறி அரசியல் கட்சியினர் செயல்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், வாட்ஸ் அப் குழு, முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்தால் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பாயும் என எச்சரித்தார். தேர்தல் முடியும் வரை தேவையில்லாமல் வெளிநபர்கள் சென்னைக்குள் வரக் கூடாது எனவும் சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.