சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னையில் 30 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 327 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், அவற்றில் 10 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், வாகன தணிக்கையில் இதுவரை 44 கோடியே 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு ச்சாவடிகளில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.